கடுமையான விமர்சனங்களின் மத்தியில் தமிழினியின் நூல்கள் வெளியீடு
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமரன் எழுதிய "ஒரு கூர்வாளின் நிழல் " (போராட்டகுறிப்புக்கள்) மற்றும் "போர்க்காலம்" (கவிதை தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் நடைபெறருக்கொண்டுள்ளது .
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் பொன். காந்தன் தலைமையில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியது .நூலின் வெளியீட்டு உரையினை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் ஆனந்தசங்கரி மற்றும் மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.அதேவேளை இந் நூல்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







