Breaking News

பசிலின் மைத்துனர் கைது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் திஸ்ஸ குணதிலகவை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

காணி ஒன்றை வாங்கப் பயன்படுத்திய 50 மில்லியன் ரூபாவை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில் திஸ்ஸ குணதிலக வாங்கிய 50 மில்லியன் ரூபா காணி தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள திஸ்ஸ குணதிலகவை எதிர்வரும் 28ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.