சோபித தேரர் மரணம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
நேற்றைய தினம் முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சோபித தேரரின் மரணத்தின் பின்னணியில் சூழ்ச்சித் திட்டமொன்று காணப்படுவதாக உடுவே தம்மாலோக்க தேரர் உள்ளிட்ட சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதனைத் தொடாந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்தது.இந்த மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்துமாறு சமூக நீதிக்கான தேசிய அமைப்பு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைகள் தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரர் உள்ளிட்ட பலரிடமும் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறைத் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.








