Breaking News

தீர்வு கிடைக்கும்வரை ஓயமாட்டோம்! - சுமந்திரன்

இந்த நாட்டில் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் என்ன நடந்­தது என ஆட்­சி­யா­ளர்­களால் சொல்­லப்­படும் வரை நாம் ஓய்ந்து விடாமல் மக்­க­ளுக்­காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

நேற்று அக்­க­ரைப்­பற்று அதா­உல்லா அரங்கில் இடம்­பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில்;

அம்­பாறை மாவட்­டத்தில் முதலில் இந்த நிகழ்வு ஏற்­பா­டாகி நடக்­கின்­ற­தை­யிட்டு பெரு­மை­ய­டை­கிறேன், ஒரு சில­வி­ட­யங்­களை என்னால் பேச முடி­யாது. இந்­தப்­பி­ர­தே­சத்தில் குறிப்­பிட்ட ஒரு நபர் குறித்த குற்­றச்­சாட்டு இருக்­கி­றது. அந்த குற்­ற­வா­ளிக்கு சாட்­சி­ய­ம­ளித்த நப­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டு அவர் வெளி­நாடு சென்­றி­ருந்தார். அது முன்னர் இருந்த அரசின் அகோரம்.

ஆனால் இன்று அது மாறி­யி­ருக்­கி­றது, இன்று குறிப்­பிட்ட அந்த நப­ருக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக குரல் கொடுக்­கின்­றீர்கள். இதுதான் நல்­லாட்சி, காணாமல் போன­வர்கள் குறித்து இந்த அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யி­ருக்­கி­றது. காணாமல் போன­வர்­களின் பிரச்­சி­னை­களை விடவும் முக்­கிய ஒரு சில விட­யங்கள் இன்னும் மீத­மி­ருக்­கின்­றன. அத­னா­லேயே எங்­களால் அரசின் பங்­கா­ளி­க­ளாக இருக்க முடி­யாது.

ஆனால் காணாமல் போன­வர்­களின் உற­வு­களின் ஆதங்கம் எனக்கு புரி­கி­றது. அதற்­காக உட­ன­டி­யாக எத­னையும் செய்­து­வி­ட­மு­டி­யாது, அரசு மாறி­யி­ருக்­கி­றது என்று கூறப்­ப­டு­கி­றது. உண்­மையில் அனைத்தும் மாறி­வி­ட­வில்லை. ஜனா­தி­ப­தியும் அமைச்­சர்­க­ளுமே மாறி­யி­ருக்­கி­றார்கள். அரச உயர் அதி­கா­ரிகள் மாற­வில்லை. இரா­ணுவ அதி­கா­ரிகள் மாற­வில்லை, நாம் ஜெனிவா மாநாட்டில் பிரத்­தி­யேக மாக இள­வ­ரசர் செய்ட் ஹுசேனை சந்­தித்தோம். பாது­காப்பு விட­யங்கள் மாற­வேண்டும். அப்­போ­துதான் நாட்டில் ஒரு­சில மாற்­றங்கள் நிகழும் அதற்கு கால­அ­வ­காசம் தேவை என்று அவர் என்­னிடம் கூறினார்.

ஆகவே ஒரு சில விட­யங்­களை செயற்­ப­டுத்த முடி­யாது. ஆனால் என்னால் தமிழ்த் தேசியக் .கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் ஒரு வாக்குறுதியை வழங்க முடியும். காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் முடியும் வரை உங்களோடு இருப்பேன், எமது கட்சியும் உடன் இருக்கும் என்றார்.