Breaking News

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழ்.பல்கலையில் உண்ணாவிரத போராட்டம்

சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் நாளைய தினம் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை மேற்க்கொள்ளவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்த  போராட்டமானது நாளை காலை 10 மணிதொடக்கம் மாலை 5 மணிவரைக்கும் நடைபெறும் என அறிவித்துள்ளது.