கைதிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில் இன்று சங்கிலிப் போராட்டம்
நீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை முற்பகலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன.
இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில் வரை சென்றடைந்து, அங்கு சர்வமத் பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.இதனைத் தொடர்ந்தே சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.








