Breaking News

என் கல்லறையே என்னை மன்னிக்காது


சட்­ட­சபைத் தேர்­தலில் தி.மு.க.வு டன் கூட்­டணி அமைத்தால் எனது கல்­லறை கூட என்னை மன்­னிக்­காது என ம.தி.மு.க.பொதுச்­செ­ய­லாளர் வைகோ தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தி.மு.க., பா.ம.க., காங்­கிரஸ் கட்­சிகள் அங்கம் வகித்த மத்­திய அர­சுதான் இலங்­கைக்கு ஆயு­தங்கள் வழங்கி தமிழ் இனத்தை அழிக்க கார­ண­மாக இருந்­தது. ஒரு இன அழி­வுக்கு கார­ண­மா­னவர் கரு­ணா­நிதி. அவ­ரது இயக்­கத்­துடன் எப்­படி கூட்­டணி வைக்க முடியும்? அப்­படி நான் அவ­ரது இயக்­கத்­துடன் உறவு வைத்தால் எனது கல்­லறை கூட என்னை மன்­னிக்­காது.

தமிழ் இனத்­துக்கே கேடு விளை­வித்­த­வர்கள் மகளிர் உரிமை மாநாடு போடு­கி­றார்கள். தமி­ழ­கத்தில் மதுவை அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் கரு­ணா­நிதி. மது கோரத் தண்­டவமாடக் கார­ணமே அவர்தான். கரு­ணா­நி­திக்கு பின்னர் ஆட்­சிக்கு வந்த எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா ஆகியோர் மது விற்­ப­னையை தமி­ழ­கத்தில் பர­வ­லாக்­கி­னார்கள்.

மக்கள் நல கூட்­டணி ஆட்­சிக்கு வந்தால் தமி­ழ­கத்தில் மது­வி­லக்கை நிச்­சயம் அமுல்­ப­டுத்­துவோம். மது வின் கொடு­மை­யி­லி­ருந்து தமி­ழ­கத்தை மீட்கவேண்­டு­மெனில் மக் கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றார் .