Breaking News

ஊடகவியலாளர் நா.நவரட்ணராஜா மாரடைப்பால் உயிரிழப்பு

யாழில் மூத்த ஊடகவியலாளர் நா.நவரட்ணராஜா இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்று இருந்த நிலையில், நேற்றைய தினம் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை சத்திர சிக்கிசை மேற்கொள்ளப்பட இருந்த வேளை அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.