கிழ.பல்கலை சிங்கள மாணவர்கள் வெறியாட்டம் 9 தமிழ் மாணவர்கள் வைத்தியசாலையில்
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நேற்று சிங்கள மாணவர்களால் தமிழ் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இதில்காயமடைந்த 9 தமிழ் மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் தற்போது திருகோணமலை நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த வாரங்களில் இடம் பெற்ற தமிழ் மாணவர்கள் மீதான பகிடிவதை சிங்கள மாணவர்களால் தொடரப்பட்டிருந்த நிலையில் அதன் அடுத்த கட்டமாகவே நேற்றைய சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து தப்பிய தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை சித்த வைத்தியத்துறை வளாகத்தில் பதற்றம் நிலவி வருவதாகவும் இதனால் அச்சமடைந்ந யாழ்,கிளிநொச்சி மற்றும் மன்னாரை சேர்ந்த தமிழ் மாணவர்கள் தமது இல்லங்களுக்கு சென்றுள்ளதாகவும் தமிழ்கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் இடம்பெற்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் அங்கிருந்து வரும் செய்திகளை ஏனைய ஊடகங்கள் வெளியிடாமல் மௌனம் காத்து வருவதாகவும் மாணவர் பக்கத்திலிருந்து அறியவருகின்றது.








