மகிந்தவின் கொடுமையை கூறும் சந்திரிகா
பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து மகிந்த என்னை புத்தி சுயாதீனமற்றவராக மாற்ற முயற்சித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வானது கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
எனது ஆட்சிகாலத்தின் பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்பட்ட நான், மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சிறு பான்மையினமான தமிழ், முஸ்லிம் மக்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடூர தன்மையு டைய சர்வாதிகார செயற்பாடுகளை சகித்து கொள்ள முடியாமையினாலும் எமது நாட்டை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்கவுமே நான் மீண்டும் அரசியலில் பிரவேசித்த தோடு நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமை க்கவும் ஒத்துழைப்பு வழங்கினேன் என முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்தார்.
மேலும் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவர் உச்சக்கட்ட அதிகாரத்தினை பயன்படு த்தி என்னுடன் சார்ந்தவர்களை பல்வேறு அழுத்தங்களுக்கு உட்படுத்தியதோடு என்னை தனிமைப்படுத்துவதன் மூலம் புத்தி சுயாதி னம் அற்றவராக மாற்றவும் முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறு வதற்கு தன்னுடைய செயற்பாடே காரணம் எனவும் சந்திரிகா இதன்போது நினைவூட்டி னார்.
தனது அமைச்சரவையில் புத்தகங்களை படிக்கும் இரு ஆண்கள் மாத்திரமே இருந்த தாகவும், அதில் ஒருவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








