கிழக்கில் காணிப்பிரச்சினைகள் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் இதுவரையில் காணிப் பிரச்சினை தொடர்பில் 17, 896 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2013,2014,2015 முதலிய மூன்று வருடங்களில் காணிப்பிரச்சினை தொடர்பில் 17, 896 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 3428 காணிப்பிரச்சினைகளும் அம்பாறை மாவட்டத்தில் 9453 பிரச்சினைகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1256 பிரச்சினைகளும் பதிவாகியுள்ளதாக காணி அமைச்சு தெரிவித்துள்ளது. காணி இழந்தவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சு கூறுகிறது. இவை புதிய குடியேற்றங்களின் தரவுகளா என்ற சந்தேகமும் எழுப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 1256 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2029 காணிகளும் அம்பாறை மாவட்டத்தில் 831 காணிகளுமான கிழக்கில் 4115 பேருக்கு காணித்துண்டுகள் வழங்கியுள்ளதாகவும் காணி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளி மாகாணங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் காரணமாகவே காணிப் பிணக்குகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்டவர்களும் குடியேற்றவாசிகளுக்கும் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி 17896 காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளதாக காணி அமைச்ச தெரிவித்துள்ளது. திருகோணமலையில் 365 பிரச்சினைகளும் அம்பாறையில் 294 பிரச்சினைகளும் மட்டக்களப்பில் 1127 பிரச்சினைகளும் தமது அமைச்சால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.








