Breaking News

வித்தியா கொலை வழக்கு - 13 ஆவது சந்தேக நபர் விரைவில் கைது

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 13 ஆவது சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவுள்ளோம் என்று குற்றப்புனைவு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது மன்றில் தோன்றிய குற்றப்புனைவு பிரிவின் அதிகாரியாலேயே 13 ஆவது சந்தேக நபர் தொடர்பாக பிரஸ்தாபிக்கபட்டது.

மேலும் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர்

வித்தியா கொலை வழக்கின் 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரைக்கும் விளக்க மறியலில் வகைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.