சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் இருந்த 194 பேருக்கு காணி உரிமைப் பத்திரங்கள்
சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் இருந்த 194 குடும்பங்களுக்கு, இன்று தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
வவுனியாவில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள, சிதம்பரபுரம் நலன்புரி முகாம், கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இங்கு பல ஆண்டுகளாக வசித்து வந்த மக்களுக்கே, அந்தப் பகுதிக் காணிகள், பிரித்துக் கொடுக்கப்படவுள்ளன.
இதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும், 60 பேர்ச் காணிகள் (16,500) சதுரஅடி) வழங்கப்படவுள்ளன.இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த காணிகளின் உரிமை அவர்களுக்கே வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பகுதி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வடக்கு மாகாணசபை ஏற்கனவே, 13.5 மில்லியன் ரூபாவை, வவுனியா பிரதேச செயலகத்துக்கு வழங்கியுள்ளது.








