விக்னேஸ்வரனும், சம்பந்தனும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள்
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர் என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ராவய அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மாகல்கந்தே சுதந்த தேரர் இதனைக் குறிப்பிட்டார்.இனவாத, பிரிவினைவாத பிரசாரங்களை மட்டுமே குறித்த இருவரும் நடத்திவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர் இதன்போது முன்வைத்தார்.








