பிரித்தானிய பாணியில் சுயாதீன ஒலி ஒளிபரப்பு அதிகாரசபை உருவாக்கப்பட உள்ளது
பிரித்தானியாவில் அமுலில் உள்ள சுயாதீன ஒளிபரப்பு ஆணைக்குழுவிற்கு நிகரான வகையில் இலங்கையில் சுயாதீன ஒளிபரப்பு அதிகாரசபையொன்று உருவாக்கப்பட உள்ளது.
வெகு விரைவில் இந்த அதிகாரசபை உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலத்திரனியல் ஊடகங்களை நெறிப்படுத்தும் வகையில் இந்த அதிகாரசபை உருவாக்கப்பட உள்ளது.
இந்த அதிகாரசபையின் பணிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தப் போவதில்லை எனவும், முழுக்க முழுக்க சுயாதீனமான அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அச்சு ஊடகங்கள் தொடர்பில் தற்போது காணப்படும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினை விடவும் வேறு பட்ட அடிப்படையில் இந்த அதிகாரசபை உருவாக்கப்பட உள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் சட்ட ரீதியான உரிமையுடன் இந்த அதிகாரசபை நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகத்துறை சார் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி இந்த அதிகாரசபை உருவாக்கப்பட உள்ளது.
ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிகாரசபை உருவாக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.காத்திரமானதும், ஒழுக்க விதிகளுக்கு முரண்படாததுமான ஓர் புதிய ஊடக கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில் இந்த அதிகாரசபை உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.








