Breaking News

அமைச்சர்களுக்கு புதிய சட்டம்



பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு விடயப் பொறுப்பு அமைச்சர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்க புதிய வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றம் கூடும் இரண்டாவது வாரம் பிற்பகல் மணி முதல் அனைத்து அமைச்சர்களும் இருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.