Breaking News

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான, பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது. அவரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவால் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.