Breaking News

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் இன்னும் வலுவானதாக இருக்குமாம்!

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, இன்னும் கூடுதல் வலுவான சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான கூடுதல் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

பிரித்தானியாவில் உள்ள தீவிரவாத தடுப்புச் சட்டம், சிறிலங்காவில் இப்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட வலுவானது.

புதிய சட்டத்தை வரையும் பணியில், சட்ட நிபுணர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இணையக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலான குற்றச் செயல்களை உள்ளடக்குவது தொடர்பாக இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.