Breaking News

நல்லாட்சி அரசாங்கம் குறித்து இந்தியா அதிருப்தியில்

நல்லாட்சி அரசாங்கம் குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு சர்ச்சை ஏற்படும் வகையில் சீனாவுடன் இலங்கை உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.

துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டத்தை ஆரம்பித்தல், மத்தள விமான நிலையத்தின் பணிகளை சீனாவிடம் ஒப்படைத்தல், ஹம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கரில் சீன முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தல் போன்றன தொடர்பில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது.

பிரதமருக்கு நெருக்கமான ஒர் அமைச்சரை இந்தியாவிற்கு அழைத்து தமது அதிருப்தியை இந்தியா வெளியிட்டுள்ளது.