Breaking News

இலங்கையுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிரும் நாடுகள் – ருவான் தகவல்

மலேசிய உள்ளிட்ட பல நாடுகள், இலங்கையுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்,  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.


இலங்கையின் புலனாய்வுச் சேவை, அரசாங்கத்தின் அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள அவர், பல்வேறு நாடுகளுடன் இணைந்து இலங்கை பணியாற்றிய வருவதாகவும்,  மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டைப் பிளவுபடுத்தவோ, தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கவோ,  அரசாங்கம் இடமளிக்காது.இலங்கை அரசாங்கமும், வடக்கில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரப்பகிர்வு பற்றிக் கலந்துரையாடலாம். அதன்புாது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும்.

நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுக்கின்ற போது,இலங்கையின்  ஒற்றுமையை பாதுகாக்கின்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.