Breaking News

கூட்டு எதிர்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கிறார் மஹிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதை கூட்டு எதிர்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டு வர்த்தக தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய தமது மே தினப் பேரணியில் பங்கேற்கவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மே தினப் பேரணி பாரிய அளவில் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன, ஒரு பேரணி நாராஹேன்பிட்டி சாலிக்கா மைதானத்தில் இருந்தும் மற்றுமொரு பேரணி நுகேகொடையில் இருந்தும் ஆரம்பிக்கப்படும் என கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.