Breaking News

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு 500 ரூபாய்: அதிர வைத்த ராஜபாளையம்!

பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ஷியாமுக்கு, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அதிமுகவினர் 500 ரூபாய் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, ஓட்டுக்கு பணம் தருவதை தடுப்பதற்காக 8 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று உறுதியேற்கும்படி கட்சிகளையும், வேட்பாளர்களையும் வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் நேற்று முன்தினம்தான் இந்த யோசனைகளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூறிய நிலையில், அதனை காற்றில் பறக்க விட்டார் போல் ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாமின் இன்றைய நடவடிக்கை அமைந்தது. பிரசாரத்தின்போது, வேட்பாளர் ஷியாமுக்கு ஆரத்தி எடுத்து பெண்ணுக்கு, அதிமுக 19வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அப்படி வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.