Breaking News

ருமேனியாவில் பிடிபட்ட 5 இலங்கையர்கள் சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்

சட்டவிரோதமாக ருமேனியாவுக்குள் நுழைந்த இலங்கையைச்  சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சேர்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ருமேனியாவில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த இலங்கை, ஈராக், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேரை, சேர்பியாவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள குடிவரவு தொடர்பான உடன்பாட்டுக்கு அமையவே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

திமிஸ் ஆற்றங்கரையில், ருமேனி எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இவர்கள் கடந்த ஏப்ரல் 6ஆம் நாள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட ஐந்து இலங்கையர்களும், 20 தொடக்கம் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.