மே-18 நினைவு வாரம் இன்று ஆரம்பம்: செம்மணியில் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் செம்மணி புதைகுழி பகுதியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி ஆரம்பித்து வைத்துள்ளார்.இதன்போது, செம்மணிப் பகுதியில் 15 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூர்ந்து தமிமிழன படுகொலை வாரம் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பாகிய தமிழன படுகொலைகள் வார ஆரம்ப நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இந்த நிகழ்விற்கு வடமாகாணத்திலுள்ள தமிழப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடக்கது.








