Breaking News

காணாமற்போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி



கடந்த காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஒன்று சுயாதீன நிறுவனமாக இயங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மையான தகவல்களை வழங்குவதற்கும், அவர்கள் தொடர்பில் உறவினர்களால் இறுதி தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட ஏனைய சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

கண்டுபிடிக்க முடியாதவர்கள் தொடர்பில் தீர்வொன்று பெற்றுக் கொள்வதற்கு அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறுதல் மற்றும் அவ்வாறானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த நிறுவனத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.