Breaking News

கருணாநிதியின் சாதனைக்கு சம்பந்தன் வாழ்த்து


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு
13-வது முறை எம்.எல்.ஏ.வாக வென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதிக்கு இரா. சம்பந்தன் அனுப்பிய கடிதம்: 

தாங்கள் 13ஆவது முறையாக தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். இதுவொரு சாதாரண சாதனையல்ல.


எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனை யாகும். ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் சாபில் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.


தொடர்புடைய செய்தி


முள்ளிவாய்க்கால் வராத சம்பந்தன் காத்தவராயன் கூத்திற்கு வருகிறார் (விபரம் உள்ளே)

ஜெயலலிதா அவர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்து வடக்கு முதல்வர் ஆற்றிய உரை