Breaking News

ஐ.நா. பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படுவது உறுதி ! மனோ கணேசன்

அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது உறு­தி­யாகும். உள்­நாட்டில் பல்­வேறு கருத்­துக்கள் கூறப்­பட்­டாலும் அதனை தட்­டிக்­க­ழித்­து­வி­ட ­மு­டி­யா­தென தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.


இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சம்­ப­வங்கள் குறித்த, பொறுப்­புக்­கூறல் குறித்த விசா­ர­ணை­களில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு இடம்­பெ­று­வது நிச்­ச­ய­மா­னது. எனினும், உள்­நாட்டு நீதித்­துறை சுயா­தீ­ன­மா­கி­யுள்ள நிலையில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு எவ்­வ­ளவு தூரம் இருக்க வேண்டும் என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மனித உரி­மைகள் மற்றும் மனித அபி­வி­ருத்­திக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் இணை அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்­னைய காலங்­களில் பாது­காப்பு அமைச்சின் கீழி­ருந்த அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான செய­லகம் தற்­பொ­ழுது எனது அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அது மட்­டு­மன்றி ஜன­வரி 8ஆம் திக­திக்கு பின்னர் நாட்டில் பல மாற்­றங்கள் நிகழ்ந்­துள்­ளன. தற்­போ­தைய நிலையில் தலை­மைத்­துவ மட்­டத்தில் இந்த மாற்­றங்கள் ஏற்­பட்­டாலும் அடி­மட்­டத்தில் அந்த மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை.

குறிப்­பாக சிவில் சமூக நிறு­வ­னங்கள் கடந்த அர­சாங்­கத்தில் நடத்­தப்­பட்­டதைப் போன்று நடத்­தப்­ப­டு­வ­தில்லை. சில தினங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் எனது அமைச்­சுக்கு முன்னால் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். இந்த ஆர்ப்­பாட்டம் முடிந்த பின்னர் அமைச்­சுக்கு வந்த பொலிஸார் செய­லா­ள­ரிடம் விசா­ரணை நடத்­தி­யி­ருந்­தனர்.

இச்­சம்­பவம் நடந்­த­போது நான் அமைச்சில் இருக்­க­வில்லை. கேள்­விப்­பட்­ட­வுடன் பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரிவில் பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரியைத் தொடர்­பு­கொண்டு எனது கண்­ட­னத்தைத் தெரி­வித்­தி­ருந்தேன்.

அதே­போன்று அம்­பாறை மாவட்­டத்தில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னரின் வீடு­க­ளுக்கு தவ­றான நேரத்தில் சென்று பொலிஸார் கத­வைத்­தட்­டிய சம்­ப­வங்­களும் அவர்­களை மர­ணச்­சான்­றி­த­ழைப்­பெ­று­வ­தற்கு அழுத்­த­ம­ளித்த சம்­ப­வங்களும் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வி­ட­யங்கள் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­ட­தோடு அதற்கு தீர்­வாக காண­ாம­லாக்­கப்­பட்டோர் சான்­றிதழ் வழங்­குவ­தற்­கான இணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய சில சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்­றன. இருந்­தாலும் முன்­ன­ரைப்­போன்ற நிலை­மைகள் தற்­போ­தில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் எவ்­வி­த­மான தடை­யு­மின்றி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் நான் கடந்த காலத்தில் ஒரு சிவில் செயற்­பாட்­ட­ாள­னா­கவே செயற்­பட்­டி­ருந்தேன். நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் அத்­த­கைய செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட அனு­ப­வங்கள் எனக்­குண்டு. இதனால் என்­னுடன் இணைந்து செயற்­பட்ட நட­ராஜா ரவிராஜ், லசந்த விக்­ர­ம­துங்க ஆகி­யோரின் உயிர்­களும் பறிக்­கப்­பட்­டன. எவ்­வாறோ நான் தப்­பித்து உங்கள் முன்­னி­லையில் அமைச்­ச­ராக பேசிக்­கொண்­டி­ருக்­கின்றேன்.

என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் நான் சிவில் சமூ­கத்­தி­ன­ருடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஒரு­போதும் பின்­னிற்­கப்­போ­வ­தில்லை.

தற்­போது கூட பல விட­யங்கள் குறித்து நான் அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­துள்ளேன். எதிர்­கா­லத்­திலும் நன்­மை­யான விட­யங்கள் குறித்து நாம் கலந்­து­ரை­யா­டு­வதற்கு தயா­ரா­கவே உள் ளேன்.

இந்த நாட்டில் நீதிச்­செ­யற்­பாடு உள்­ளிட்ட முக்­கி­ய­மான விட­யங்­களை கையாள்­வ­தற்கு வெவ்­வேறு அமைச்­சுக்கள் காணப்­பட்­டாலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துதல் என்ற மிக­முக்­கி­யமான விடயம் என்­னி­டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை எந்த தடைவந்தாலும் முன்னெடுப்பேன் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. இச்செயற்றிட்டத்தில் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு நிச்சயம் காணப்படும். அதேநேரம் மாவட்ட மட்டங்களில் சிவில் சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இதன்போது பொலிஸார் வீணான தலையீடுகளை மேற் கொள்ளாது விலகியிருப்பது குறித்து சட் டம் ஒழுங்கு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன் என்றார்.