வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை, அமைச்சராக ப.சத்தியலிங்கம்
வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகளுக்கான அமைச்சராக ப.சத்தியலிங்கம் நியமிக்க ப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின்154 ஊ( 5) ஆம் உறுப்புரைக்கு அமைய தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகளுக்கான அமைச்சராக ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








