Breaking News

பிரதமர் ரணில் விக்ரம சிங்காவிற்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்



வவுனியா பொருளாதார மையம் தொடர்பில் வட மாகாணசபையின் தீர்மாணத்திற்கு மாறான வகையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்காவிற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

வட மாகாணத்துல் ஓர் பொருளாதார மையம் அமைக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இந்த ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இதற்கு 400 மில்லியன் ரூபாநிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நிதியில் இருந்து குறித்த பொருளாதார மையத்திற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கான நில ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை நிலவியது. குறிப்பாக தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என மாவட்டத்தின் பெரும்பாலான அரசியல் வாதிகளும் விவசாயிகள் , உள்ளூர் அமைப்புக்கள் என்பன கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந் நிலையில் மாவட்டத்தின் சில அரசியல் வாதிகளும் வட மாகாண விவசாய அமைச்சரும் குறித்த திட்டம் ஓமந்தைப் பகுதியில் அமைய வேண்டும் என கோரிக்கை விடப்பட்ட நிலையில் பல சர்ச்சைகள் கருத்து வேறுபாடுகளின் மத்தியில் மேற்படி விடயம் வட மாகாண சபையின் கவணத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு பிரேரணையாகவும் சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தாண்டிக்குளம் விதை உற்பத்திப் பண்ணையில் இருந்து நிலம் வழங்குவதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரதிகள் உரிய அமைச்சு மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு உரிய பணிகள் முன்னெடுக்க நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இருப்பினும் தற்போது மீண்டும் பொருளாதார மைய இடம்தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் குறித்த மையத்தினை ஒமந்தைப் பகுதியில் அமைப்பதற்குரிய உத்தரவினை வழங்கவேண்டும் என கடிதம் மூலம் கோரியுள்ளார்.

இவ்வாறு வட மாகாணசபை ஓர் தீர்மாணத்தினையும் வட மாகாண முதலமைச்சர் ஓர் முடிவினையும் மேற்கொண்டு இரு பதில்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையினால் குறித்த பணிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது .

தடைப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய அமைப்புக்கள் கவலை தெரிவிப்பதோடு இந்த ஆண்டு இப்பணிகள் இடம்பெறாமல் தடைப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பினையும் வட மாகாண முதலமைச்சரும் , வட மாகாண விவசாய அமைச்சருமே ஏற்று பதிலளிக்க வேண்டும் . எனவும் தெரிவித்ததோடு இது தொடர்பில் எதிர் வரும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.