Breaking News

அனைத்து இலங்கையர்களின் ஈடுபாடும் அவசியம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அனைத்து இலங்கையர்களினதும் அர்த்தபூர்வமான ஈடுபாடு அவசியம் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இடைமாற்றுக்கால நீதி தொடர்பான 30-1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் தமது கடப்பாட்டை நிறைவேற்றும் இலங்கை அரசாங்கத்தின், முயற்சிகளுக்கு ஒரு விரிவான மூலோபாயம் தேவை.

ஒருங்கிணைந்த மற்றும் வரிசைமுறைப்பபடி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளைக் கொண்டதாக அது செயற்படுத்தப்பட வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எல்லா அரசாங்கங்களும் அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு முழுமையான மதிப்பை அளிக்குமாறும், ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளின் பரிந்துரைகளையும், தமது பணியகத்தின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.