Breaking News

பிரிட்டன் தொழிற் கட்சி எம்.பி துப்பாக்கி சூட்டில் பலி-வாக்கெடுப்பு ரத்து?


பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் பிரித்தானிய அரசிடமிருந்து வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளதோடு எதிவரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள கருத்துக்கணிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார்.

இத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார் என்றும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.