Breaking News

பொலிஸார்,இராணுவம் இணைந்து சுண்டிக்குளத்தில் தேடுதல் வேட்டை (படங்கள் இணைப்பு)



கிளிநொச்சி – சுண்டிக்குளம் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இரகசிய பொலிஸாரிடம் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து 10 இராணுவச் சிப்பாய்கள், 40 பொலிஸார் உட்பட இரகசிய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கள் பயன்பாடு அற்ற அந்தக் காணியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று மாலை வேளையில் குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் அகழ்வுப் பணிகளையம் மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.