வாழைச்சேனையில் விபத்து - இரு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்தியாய பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள், அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரு பாடசாலை மாணவர்கள், மற்றும் கூலித் தொழிலாளியான 20 வயதுடைய ஒருவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்;த இருவரின் சடலங்கள் வெலிக்கந்தை வைத்தியசாலையிலும் மற்றொருவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.