Breaking News

முல்லைத்தீவில் 2,156 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தால் அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் கருணாற்கேணி பகுதி மக்களுடைய, 2,156 ஏக்கர் காணிகள் மகாவலி எல் வலயம் எனும் பெயரில் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

 அதாவது 1984 அம் ஆண்டு அந்த மக்கள் வெளியேறும்போது குறித்த காணிகள் மக்களுடையதாக இருந்தது. இதுமாத்திரமன்றி 84 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணிகளே மக்களின் பொருளாதாரத்தை தீர்மானித்தன.

அவர்கள் வெளியேறி தற்போது 30 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்கள் மிள்குடியேறியேபோது 2156 ஏக்கர் காணிகளும் பறிக்கப்பட்ட நிலையிருந்தன. பறிக்கப்பட்டுள்ள காணிகளின் எண்ணிக்கையில், மூன்று கிராமங்கள் காணப்படுகின்றன. ஆனால் ஆறு கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன.

குறித்த மக்கள் இன்றும் வாழ்வாதாரத்திற்காக கஷடப்படுகின்றன. இந்தநிலையில் பல்வேறு அழுத்தங்கள் கொடுத்தபோதும் இன்று வரை குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. இதேவேளை காணிகளை மேலதிகமாக அதிகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

வெலியோயா என்ற பிரிவுகளுடன் இணைந்து எங்களுடைய ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்தில் ஒதியமலை பிரதேச தனிக்கல் என்று சொல்லப்படும் கிராம காணிகளும் அபகரிக்கபட்டிருந்தன. உலக வங்கியால் 28.8 விதம் ஏற்கனவே உலக வங்கியால் மிக வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் கணிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்கள் பொருளாதாரத்ததை பெற்றுக்கொள்வதில் மிகவும் இன்னல்களை இன்றும் எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.