நிலைமாற்ற நீதிப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் வகிபாகம் அவசியம்
போர்க்குற்றங்கள் மற்றும் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்கும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், ஸ்ரீலங்காவின் விஷேட நீதிமன்றத்தில் வீடியோ மூலம் தாங்கள் விசாரணை செய்யப்படுவதற்கு சர்வதேச நீதிபதிகள் சம்பந்தப்பட்டிருப்படுதுடன் தமது அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறுவதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.
இந்த வாரம் ஜெனீவா மனித உரிமை பேரவையின் அமர்வில் ஸ்ரீலங்கா விவகாரம் ஆராயப்படவுள்ளது.
இந்தநிலையில் 9 மாதங்களுக்கு முன்னர் நிலை மாற்ற நீதி நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா ஜெனீவா பேரவைக்கு தெரிவித்திருந்ததுடன் அது தொடர்பான கருத்தொருமைப்பாட்டிற்கும் இணங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் பரிசீலக்கப்படவுள்ளது. சியராலியோன் மற்றும் லைபீரியாவையும் சேர்த்து நிலைமாற்று நீதி நீதி நடவடிக்கைகளின்போது நாட்டுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடப்படுவது தமது அறிவுக்கு எட்டியவரை இது மூன்றாவது தடவையாகும் என்று ஆய்வறிக்கையை தயாரித்த ஜஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.








