Breaking News

பொதுமக்கள் காணிக்குள் புகுந்து இராணுவம் அட்டகாசம்



கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்திலுள்ள தனிநபர் காணியொன்றிற்குள் புகுந்த இராணுவம், அங்குள்ள கோழிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியிலுள்ள வீட்டில் பெண்கள் தனிமையில் இருந்த வேளையில், அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள சிப்பாய்கள் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வேளையில் இவ்வாறு செய்துள்ளனர்.

குறித்த காணியில் வீட்டார் தடுப்பு வேலி அமைத்திருந்த நிலையில், அதனை அறுத்துக்கொண்டே இராணுவ சிப்பாய்கள் உட்பிரவேசித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.