Breaking News

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது – அஸ்கிரிய பீடாதிபதி


வடக்கில் உள்ள  இராணுவ முகாம்கள் அகற்றப்படக் கூடாது என்று, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான, வண. வேரககொட சிறி குணரத்ன தேரர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இலங்கையின் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க நேற்று அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இதன்போதே அவர், வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தாலும், இராணுவ முகாம்களை தற்போதுள்ள இடங்களில் இருந்து மாற்றக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில்  இராணுவத்தினரின் இருப்பு தேசிய பாதுகாப்புக்கு அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, வடக்கில்  அரசாங்கத்தின் மூலம் சிவில் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு அவசியமானது. என்று தெரிவித்தார்.