அரச வைத்தியர் சங்கத்தின் கோரிக்கைக்கு இன்று பதில்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் படி 2016 ஆம் ஆண்டுக்கான வைத்தியர்கள் நியமனம் தொடர்பான புதிய பட்டியல் இன்று (03) வெளியிடப்படும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரச வைத்தியர்கள் சங்கம் கடந்த 31 ஆம் திகதி நாடு தழுவிய 4 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.








