சமஷ்டி எனும் போர்வையில் தனிநாடு அமைக்க சதியாம்! - கெஹெலிய
வடக்கு கிழக்கை இணைத்து, சமஷ்டி எனும் போர்வையில் தனி நாட்டை உருவாக்க நாடாளுமன்றில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு, தெற்கில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து வாய்திறப்பதில்லையெனவும் தனிநாட்டு கொள்கையை தவிர அவர் வேறு எதனையும் பற்றி கதைப்பதில்லையென்றும் கெஹெலிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, வட மாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென குறிப்பிட்ட கெஹெலிய ரம்புக்வெல, அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, ஆபத்தான விடயங்களை முன்னெடுத்து வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.








