Breaking News

சமஸ்டியை கோருவது தமிழ் மக்களா? தமிழ் தலைமைகளா?



வடக்கின் மக்கள் சமஸ்டியில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்று அரசியல் அமைப்பு மீளஉருவாக்க குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்

விசும்பாயவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற லால் விஜேநாயக்க, சமஸ்டி தீர்வு தேவை என்பதை வடக்கின் அரசியல்வாதிகளே வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் வடக்கில் உள்ள பெரும்பாலானோர் ஒற்றையாட்சியையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை வடக்கில் உள்ள பெண்கள், தேச வழமை சட்டத்தின் ஊடாக தமது கணவர்மார்காணாமல் போனமையின் பின்னர் பிள்ளைகளுக்கு சொத்துக்களை மாற்றுவதில் பாரியபிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.