இனங்களின் உணர்வுகளை மதித்தாலே நல்லிணக்கம் சாத்தியமாகும்- ஜனாதிபதி
உலக மக்களுடன் சேர்ந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காகவும் நோன்பு திறக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமையானது இன நல்லிணக்கத்திற்கான சிறந்த முன்மாதிரியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
எந்தவொரு மதமாக இருந்தாலும், அதனைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதனை மேற்கொள்ளும் போதே இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு சாத்தியப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
 

 
 
 
 
 
 











