தீவிரவாதிகளின் பிடியில் பணயக் கைதிகளாகவிருந்த இலங்கையர்கள் மீட்பு
பங்களாதேஷ் தலைநகர் டகாவிலுள்ள உணவகமொன்றில் ஐ.எஸ் தீவிரவாதிகளினால் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை பங்களாதேஷில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் தீவிரவாதிகளுக்கும், பொலிஸாரிற்கும் இடையில் இன்றுகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் பங்களாதேஷ் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.








