கமல் அவசர சிகிச்சைப் பிரிவில்..!! - THAMILKINGDOM கமல் அவசர சிகிச்சைப் பிரிவில்..!! - THAMILKINGDOM

 • Latest News

  கமல் அவசர சிகிச்சைப் பிரிவில்..!!  ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள வீட்டில் கமல், தாய், தந்தை சகோதரருடன் முன்பு வசித்து வந்தார். தற்போது நீலாங்கரையில் கெளதமியோடு வசித்து வரும் கமல் ஆழ்வார்ப்பேட்டை வீட்டை தனது அலுவலமாக மாற்றி விட்டார்.

  ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த கமல் தனது படக்குழுவினருடன் சென்னை திரும்பினார். கடந்த ஜூலை 13ம் தேதி இரவு ஆழ்வார்ப்பேட்டை வீட்டில், மாடியில் கால் இடறி முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கால் வலியால் துடித்த கமலை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளித்தனர்.

  மூட்டு எலும்பு முறிவு கடுமையாக ஏற்பட்டு இருப்பதால் முட்டியில் ப்ளேட் வைத்து ஆபரேஷன் செய்யும் முடிவுக்கு வந்தனர். தனியார் ஆஸ்பத்தியில் இருந்து உடனடியாக வீட்டுக்கு திரும்பி விடலாம் என்று நினைத்திருந்த கமல் டாக்டர்கள் சொன்ன செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். ஆபரேஷன் செய்த பிறகு, பல வாரங்கள் பெட்ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் நிபந்தனைகள் விதித்தனர்.

  அதுமட்டுமல்ல ஆபரேஷனுக்கு பிறகு நீலாங்கரை வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்வதாக கமல் சொன்ன கோரிக்கையை டாக்டர்கள் நிராகரித்து ஆஸ்பத்தியிலேயே ஒய்வு எடுக்குமாறு ஆலோசனைகள் கூறினர்.

  கடந்த 27-ம்தேதி கமலுக்கு ஆபரேஷன் செய்த இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வலியால் துடிதுடித்துப்போன கமலை அழைத்துச் சென்று ஆபரேஷன் செய்த இடத்தை ஸ்கேன் செய்து பார்த்தனர். மீண்டும் இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்று முடிவானது. அதன்படி ஆபரேஷனும் நடந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

  ‘இரண்டாவது முறையாக ஆபரேஷன் நடந்ததால் கமல் கடும் மன உளைச்சலில் தவிக்கிறார். உடல்வலி தாங்க முடியாமல் துடிக்கிறார்’ என்று லதா ரஜினியிடம் உருக்கமாக பேசி இருக்கிறார், சுஹாசினி.

  கமல் உடல்நிலை குறித்த உண்மை நிலையை லதா ரஜினியிடம், சுகாசினி சொல்ல அவரும் அப்செட். லதா மூலம் தகவல் அறிந்த ரஜினி ‘இதுமாதிரி நேரத்துல நான் கமலுக்கு ஆறுதலா பக்கத்துல இருக்கணும் உடனே கிளம்பணும்’ என்று படபடப்பாகச் சொல்லி இருக்கிறார்.

  ‘முதல்ல நீங்க ரெஸ்ட் எடுங்க. ஆஸ்பத்திரிக்கு நீங்க போனால், உங்களுக்கு இன்ஃபெக்‌ஷன் ஆயிடும்’ என்று ரஜினிக்குத் தடா போட்டுவிட்டார்களாம் அவரது மருத்துவர்கள். அதன்பின் கமலுக்கு ஆறுதல் சொல்ல ரஜினி முயற்சித்தார். ஆனால், கமல் ஐசியுவில் இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கமலின் உறவினர்களிடம் ஃபோனில் ஆறுதல் சொல்லி இருக்கிறார், ரஜினி.

  திரையுலகம்… அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது….
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கமல் அவசர சிகிச்சைப் பிரிவில்..!! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top