முன்னர் பாண் சாப்பிட்ட கடனையும் நாமே செலுத்தினோம்- மஹிந்த
நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது முந்திய அரசாங்கம் பாண் சாப்பிட்ட கடனையும் செலுத்தினோம். ஆனால், தற்போதைய அரசாங்கம் எம்மீது கொண்ட வெறுப்பின் காரணமாக சிறு பிள்ளைகளின் முன்னிலையிலும் எமக்கு ஏசித் திரிகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பெலியத்த பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை அவர் கூறியுள்ளார்.
நான் செய்த மாற்றங்கள் சுமையாக இருக்கவில்லை. பாதைகள் செப்பனிடப்பட்ட போது அதன் சுமை மக்களுக்கு விளங்கவில்லை. அதிவேக பாதை அமைத்த போது மக்களுக்கு சுமை தெரியவில்லை. ஆனால், தற்போது வைத்தியசாலைக்கு சென்றால், மருந்து இல்லை. மருந்து எடுக்கச் சென்றால் வற் வரிச் சுமையை உணர்கின்றோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.








