Breaking News

பொலிஸ் மா அதிபர் “சிக்கியுரிட்டி” வேலை பார்க்கவும்- கம்மம்பில



பொலிஸ் மா அதிபருக்கு பச்சை நிற தொப்பியை அணிந்துகொண்டு சிறிக்கொத்தவில் காவலர் உத்தியோகம் பார்க்குமாறு தெரிவித்துக் கொள்கின்றோம் என தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சி முன்னெடுத்துவரும் நடைபவனியின் இரண்டாவது நாள் நிறைவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அவரைப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்தமைக்காக அவர் தேர்தலில் வாக்குக் கேட்டால், ஐ.தே.கட்சிக்காரர்கள் அவருக்கு வாக்குப் போடுவார்கள் எனவும் கம்மம்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்