Breaking News

தமிழர்களைக் குறிவைக்கும் மர்மக் கும்பல்கள்



தமிழர்கள் வாழும் பிரதேசங்களைக் குறிவைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மர்மக் கும்பல் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழ் மக்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவர்களைச் சீரழிப்பதற்கு திரைமறைவில் பல்வேறு சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்த் தினப் போட்டியில் சிறப்புப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அண்மையில் மதுபானப் பாவனையில் தமிழர் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களே முன்னிலை வகிக்கின்றன. இதனை அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணம் சீரழிந்துவருவதைத் தடுக்கவேண்டும். அதற்கு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டவேண்டும். இதற்கெதிராக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதவான் இளஞ்செழியன் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கதே.

எனவே, மாணவர்கள் பெற்றோர்கள் என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அனைவரும் இதன் விளைவை உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.