சுவாதி கொலையாளி கைது!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பொறியிலாளர் சுவாதி கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியிலாளர் சுவாதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த் கொலை சம்பவம் தொடர்பில் 10 சிறப்பு தனிப்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
எனினும், கொலையாளியை கைது செய்வதில் பொலிஸார் பாரிய சவால்களை எதிர்கொண்டனர். கொலை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்த பாதுகாப்பு கெமராக்களின் பதிவுகளை கொண்டு பொலிஸார் குற்றவாளியின் புகைப்படத்தினை வெளியிட்டனர்.
எனினும், குறித்த புகைப்படம் தெளிவில்லாத காரணத்தினால் கொலையாளியை அடையாளம் காண்பதில் பொலிஸார் சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், சுவாதியை கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
செங்கொட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராம்குமார் என்பவரை திருநெல்வேலியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, தாம் கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தற்போது நெல்லை, அரச வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவரும் ராம்குமார் குற்றத்தினை ஒப்புகொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.








