எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை – தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக இலகுவான வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அனைவருக்கும் நீதியை நிலை நாட்டுவது, சமத்துவம் மற்றும் பிரிவுபடாத இலங்கையை கட்டியெழுப்பவதே தமது எதிர்பார்ப்பு என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது








