Breaking News

கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு



புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வவுனியாவில் கலந்துரையாடி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இந்தவிடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சட்டத்தரணி செல்வரட்ணம் மற்றும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தகலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.