யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
வவுனியா வளாகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே வவுனியா வளாகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
விரிவுரையாளர்களும், மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடைவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன் பல்கலைக்கழத்தின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.








